ஆற்றைக் கடக்கும் அனகோண்டா என்று வெளியான காணொளியின் உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது
ஆற்றில் அனகோண்டா
ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்திருக்கும் அனகோண்டாவை நேரில் பார்த்திருக்கமாட்டோம். உண்மையில் அனகோண்டா உள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் கூட உண்டு. இந்நிலையில் பிரேசிலில் இருக்கும் க்ஸிங்கு ஆற்றில் 50 அடி நீளம் கொண்ட அனகொண்டா கடந்து சென்றதாக கூறப்பட்டது.
வெளியான காணொளி
ஆற்றை அனகோண்டா கடந்தது என்று கூறப்படுவதற்கு காரணம் சமூகவலைதளத்தில் வைரலான காணொளி தான். இதைப் பார்த்த மக்கள் பலரும் இது உண்மையா என்று அச்சத்துடன் பகிர்ந்தனர். சிலர் இதனால் நம்ப மறுத்தனர். ஆனால் லட்சக்கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது அந்த காணொளி.
உண்மை தகவல்
இந்நிலையில் அந்த காணொளி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆற்றைக் கடக்கும் அனகோண்டாவின் காணொளி உண்மை இல்லை என்றும் ஆற்றின் காணொளியை பதிவிறக்கம் செய்தவர் அதில் அனகோண்டா இருப்பது போன்று எடிட் செய்தது தெரியவந்துள்ளது.
https://twitter.com/i/status/1322084563007406080