Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய அமைப்புகள்” நாட்டை விட்டு விரட்டணும்…. அரசியல் தலைவரின் கருத்து…!!

இஸ்லாமிய அமைப்புகளை அடியோடு நாட்டை விட்டு விரட்டி அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார்

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் அந்நாட்டு அரசியல் தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் கூறுகையில், “இஸ்லாமியக் குழுக்கள் அனைத்தையும் பிரான்சிலிருந்து விரட்டி விட வேண்டும். முக்கியமாக பிரான்சில் அமையப்பெற்றிருக்கும் இஸ்லாமிய சங்கம் UOIF அமைப்பை அடியோடு ஒழிக்க வேண்டும்.

இஸ்லாமியர்களால் நடத்தப்படும் அமைப்புகள் அனைத்தையும் அவர்களது விளையாட்டு அமைப்புகள் ஒன்றியங்களின் அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக பிரான்ஸிலிருந்து அழிக்க வேண்டும்” என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய அமைப்புகள் வைத்திருக்கும் நிலங்களையும் சொத்துக்களையும் நிச்சயம் மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |