Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

ஹோட்டலில் வாங்கிய சிக்கன்….உள்ளே இருந்த புழு…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….”

திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு கிரில் சிக்கன் பார்சல் வாங்கி இருக்கிறார். பிறகு அவர் அதை வீட்டிற்கு கொண்டு சென்று தனது நண்பர்களுடன் சிக்கனை சாப்பிடத் தொடங்கி இருக்கிறார். அப்படி சிக்கனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதில் புழு இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர் அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு கொண்டு சென்று கடையின் உரிமையாளரிடம் காண்பித்திருக்கிறார்.

அதற்கு அந்தக் கடையின் உரிமையாளர் உடனடியாக அந்த சிக்கனை கீழே கொட்டிவிட்டு அதற்காக அவர் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சமாதானம் கூறி அனுப்பி இருக்கிறார்.  இது குறித்த தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதைப்பற்றி திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இது குறித்து எந்த தகவலும் வரவில்லை மேலும் நான் விடுமுறை என்பதால்   வெளியே இருக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா மற்றும் பாதுகாப்பானதாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டடு பொது மக்களுக்கு தரமான உணவுகள் கிடைக்கப் மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |