Categories
நாமக்கல் மாநில செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. ஓட ஓட விரட்டி…. கணவரின் வெறிச்செயல்…..!!

பரமத்திவேலூர் அருகே மனைவியை ஓட ஓட கணவர்   வெட்டிய  சம்பவம்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் ஆதவன் நகரைச் சேர்ந்தவர் குமார் இவர் மீனவ தொழிலாளி ஆவார், இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர் தீபிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. குமாருக்கு அவரது மனைவியான தனலட்சுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் குமார் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி தனலட்சுமி போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தனலஷ்மிக்கும்  குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குமார் அருகே இருந்த அரிவாளை எடுத்து மனைவி தனலட்சுமியின் இடது கையை வெட்டி இருக்கிறார். இதனால்  தனலட்சுமி அங்கிருந்து உயிருக்கு பயந்து  வெளியேறி போத்தனூர் மெயின் ரோடில் ஓடியிருக்கிறார்.  குமாரரும்  தன் மனைவியை ஓட ஓட விரட்டி சென்று அவரது    வலது கையையும் வெட்டி இருக்கிறார். இச்சம்பவத்தை பார்த்த  அக்கம் பக்கத்தினர்  ஓடிவந்ததும் குமார் தப்பி சென்றரர்.

பின்னர்  படுகாயமடைந்த தனலட்சுமியை அங்கு                  இருந்தவர்கள்  காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைப் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவர்கள் குமார் தனது மனைவியை  வெட்டிவிட்டு  கீழே போட்டு சென்ற அரிவாளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |