Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 மருத்துவமனைகளில் சிகிச்சை உள்ளனர். 74 லட்சத்து 32 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 551 பேர் மரணம் அடைந்ததாகவும் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |