கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடியாட்களுடன் சென்று பாட்டிலால் கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் வேப்பங்குடி அருகே பழக்கடை நடத்தி வரும் அன்பு மோனிகா தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களுடன் கணவரின் கடைக்குச் சென்ற மோனிகா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் தலைமறைவாக உள்ள மோனிகாவை போலீசார் தேடி வருகின்றனர்.