Categories
தேசிய செய்திகள்

“திருடு போன நகை” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த திருடன்….. ஒரு வருடம் கழித்து தெரிந்த உண்மை…!!

வீட்டில் இருந்து நகை திருடியவர் ஒரு வருடம் கழித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்த ரவிகிரன் என்பவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்து தான் பூட்ட மறந்து விட்டதாக நினைத்தார். ஆனால் வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் நகை திருடியவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அந்த வழக்கு முடிவடையாமல் இருந்தது. இந்நிலையில் புகார் கொடுத்த ரவிக்கிரன் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.

அதனைப் பார்த்த ரவிகிரனுக்கு   பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் அணிந்திருந்தது ரவிக்கிரன்  வீட்டில் காணாமல் போன நகைகள். இதனால் சந்தேகம் அடைந்த ரவிக்கிரன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜிதேந்தர் என்பவர்தான் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஜிதேந்தர் தாய் தான் ரவிக்கிரன் வீட்டிலிருந்து நகையை திருடியது தெரியவந்தது. இதனால் அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Categories

Tech |