வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பு இந்தியா வந்து சேரும் என்று மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப் படுவதாகவும், மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்கு முன்பு இந்தியா வந்து சேரும் என்றும் கூறினார். உருளைக்கிழங்கின் விலை உயர்வை கட்டுப்படுத்த அடுத்த இரண்டு நாட்களில் பூட்டானில் இருந்து 30,000 டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட இருப்பதாகவும் திரு பியூஸ் கோயல் தெரிவித்தார்.