கொண்டைக்கடலை – 1 கப் (வேக வைத்தது)
வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
புளி சாறு – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி வேக வைத்து கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சைமிளகாய், தக்காளியை சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
சிறிதளவு புளியை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.அதனையடுத்து வேக வைத்துஎடுத்த கொண்டைக்கடலையுடன், எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்கு கலந்ததுடன், மேலும் அதனை தொடர்ந்து உப்பு தூவி கிளறி விடவும்.
பின்பு அதனுடன் சாட் மசாலா மற்றும் கரைத்து வைத்த புளி சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சுவையான கொண்டைக்கடலை சாலட் ரெடி.