Categories
மதுரை மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கூண்டோடு மற்றம்… சென்னை நீதிமன்றம் அதிரடி…!!

அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இதில் , மாவட்ட ஆட்சியர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சென்றாரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி , தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட தலைமை தேர்தல் அதிகாரி ஏன் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜன் ,  தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை கூண்டோடு மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |