Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவி வழிப்பறி…. மடக்கிப்பிடித்த மக்கள்…. 3 பேர் கைது…!!!

மிளகாய் பொடியை தூவி விட்டு வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் உள்ள கோட்டைமேட்டு தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 18). இவர் சம்பவத்தன்று இரவு பட்டத்து விநாயகர் கோவில் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் மணிகண்டனை வழி மறித்து அவர் மேல் மிளகாய்பொடியை தூவியுள்ளனர். அதன்பின்னர் அவர் வைத்திருந்த 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினர். இதனால் மணிகண்டன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். எனவே இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் தப்பியோடிய மூன்று நபர்களையும் மடக்கி பிடித்து பழனி டவுன் காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் பழனியை சேர்ந்த இருளப்பன் (22), சதீஷ்குமார்(19), ராஜேஷ் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் திருடியவர்களை கைது செய்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |