ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மம்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி அளவுக்கு தண்ணீர் திறப்பது விளக்கம். ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக உபரிநீர் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.