Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பிற்கு வலுவூட்டும்… மட்டன் டால் ரெசிபி…!!

மட்டன் டால் செய்ய தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி                – கால் கிலோ
கடலை பருப்பு              – 200 கிராம்
கறி மசாலா பொடி    – ஒரு தேக்கரண்டி
கிராம்பு                            – நான்கு
இஞ்சி                                – ஒன்னு
பூண்டு                              – 3 பல்
நல்லெண்ணெய்         – 4 கரண்டி
வற்றல்                              – 10
மல்லி                                 – ஒரு தேக்கரண்டி
சீரகம்                                – ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம்                – அரை தேக்கரண்டி
கசகசா                             – ஒரு தேக்கரண்டி
தேங்காய்ச்சில்            –  4
புளி                                     – சிறிது

செய்முறை:

முதலில் கடாயில் மல்லி, சீரகம், பெருஞ்சிரகம், கசகசா ஆகியவற்றை நன்கு வறுத்து பின்பு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும். பின் தேங்காய்ச்சிலை தனியாக அரைத்து எடுக்கவும்.

இரண்டாவது குக்கரில் கடலை பருப்பையும், கறியையும் வேக வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தட்டின இஞ்சி, கிராம்பு, பூண்டு வறுத்து அரைத்த மசாலாகலையும் போட்டு தாளித்து நன்றாக வதக்கவும்.

பின்னர் மசாலாவின் வாசனை வந்ததும் அரைத்த தேங்காயை ஊற்றி வேக வைத்த கறியையும், பருப்பையும் கலந்து தேவையான அளவு உப்பு, மல்லி செடி மற்றும்  புளியையும் கரைத்து ஊற்றி குழம்பு வற்றியதும் இருக்கவும். இப்போது மட்டன் டால் ரெசிபி தயார்.

Categories

Tech |