கொரோனா பெருந்தொற்று தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஏறக்குறைய 8 மாதங்களாகியும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சில மாநில அரசாங்கம் பள்ளி திறப்பு குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் அறிவுறுத்தல்படி மூன்று கட்டமாக பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 8 மாதங்களாக வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப் படுகிறது. தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்