நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி. அனைத்து திரையரங்குகளும் 50 இருக்கைகளுடன் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், வணிக வளாகங்கள் உள்ள திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி. நீச்சல் குளங்கள், சுற்றுலாத்தலங்கள் திறக்க கூடாது. பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகம் நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.