Categories
தேசிய செய்திகள்

“திருமணம்” மதம் மாற்றம் செல்லுபடியாகாது…. அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது செல்லுபடியாகாது என்று அலகாபாத் ஐகோர்ட்  தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட் புதியதாக கல்யாணமான தம்பதியினரின் மனுவை தள்ளுபடி செய்யும் போது திருமணம் செய்வதற்காக மட்டுமே மதமாற்றம் என்பது செல்லுபடியாகாது  என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. பிரியான்ஷி என்பவரும் அவரது மனைவியும் தாக்கல் செய்து, “காவல்துறையினருக்கும், பெண்ணின் தந்தைக்கும் தங்கள் திருமண வாழ்க்கையை தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிடுமாறு” நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஆனால் மனுவை நிராகரித்த நீதிமன்றம், இதில்  “முதல் மனுதாரர் ஜூன் மாதம் 29ம் தேதி அன்று தன்னுடைய மதத்தை மாற்றியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் ஜூலை மாதம் 31ம் தேதி அன்று தங்களின் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டது, நீதிமன்றத்திற்கு தெளிவாக வெளிப்படுத்தி காட்டுகிறது. இதனால் திருமணத்திற்காக மட்டுமே அவர் மதம் மாறி இருக்கிறார் என  தெள்ளத்தெளிவாக நீதிமன்றம் சுட்டிகாட்டியதால் அந்த மனுவை ஐகோர்ட் நிராகரித்துள்ளது.

இதனையடுத்து 2014ம் வருடம் நூர்ஜஹான் பேகம் என்பவரின் வழக்கை குறிப்பிட்ட நீதிமன்றம், அந்த வழக்கில் சிறுமி இந்து மதத்தை சேர்ந்தவர். எனவே இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகு  திருமணம் செய்ததால், அத்தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து நூர்ஜஹான் பேகம் தாக்கல் செய்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட் நிராகரித்து இருந்தது. ஏனெனில் திருமண நோக்கத்திற்காக மதமாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறப்பட்டு உள்ளது.

Categories

Tech |