நாடு முழுவதும் கொரோனா பொது முடக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்,நவம்பர் 16 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அனைத்து கல்லூரிகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.