Categories
தேசிய செய்திகள்

உருளைக்கிழங்கு மாத சராசரி விலை ரூ.40 ஆக உயர்வு..!!

வெங்காயம் விலை ஏற்றத்தை தொடர்ந்து கடந்த 130 மாதங்களில் அதாவது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உருளைக்கிழங்கு மாத சராசரி விலை கிலோ 40 ரூபாயாக அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இந்த மாதம் உருளைக்கிழங்கு மாத சராசரி விலை 39 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. டெல்லியில் உருளைக்கிழங்கின் மாத சராசரி விலை சற்று உயர்ந்து கிலோ 40 ரூபாய் 11 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டெல்லியில் உருளைக்கிழங்கு விலை இரு மடங்காக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் உருளைக்கிழங்கின் சராசரி விலை 25 ரூபாயாக உள்ளது. இது தற்போது 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

உருளைக்கிழங்கு இருப்பு குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. குளிரூட்டப்பட்ட கிழங்குகளில்  உருளைக்கிழங்கு 36 கோடியே 50 கிலோ பைகள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டுகளில் 2018 ஆம் ஆண்டில் 57 கோடி 50 கிலோ பைகளிலும் கடந்த ஆண்டு 48 கோடி 50 கிலோ பைகளில் உருளைக்கிழங்கு இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. கொரோனா ஊரடங்கு  கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டால் வரும் நாட்களில் உருளைக்கிழங்கு விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Categories

Tech |