நாடு முழுவதும் கொரோனாபொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து கொரோனா பரவல், தாக்கத்தை கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதுமே நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதே போல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி பல்வேறு நிகழ்வுகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. படப்பிடிப்புகளில் 150 பேர் பங்கேற்கலாம். புதுச்சேரி தவிர்த்து ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இரிஜிஸ்திரேட்டின் முறை தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.