Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும்.நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்துச்சேரும்.

வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அதன்மூலம் வருமானமும் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.

வெளியூரிலிருந்து வரக்கூடிய தகவல் நல்ல தகவலாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை என்று வெளிப்படும். குடும்பத்தின் அனைத்தும் சுமுகமாகவே இருக்கும். இன்று உங்களுக்கு செல்வம் கூடும் நாளாக இருக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சில் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள்.

மாணவர்கள் இன்று விளையாடும் பொழுது எச்சரிக்க வேண்டும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும், ஏனென்றால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு பெருமாள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |