விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும்.
பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணையக் கூடும். உறவினர்கள் வழியில் அன்பு தொல்லைகளை சந்திக்க நேரிடும். சில உறவினர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். வரவு ஓரளவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும்.
உங்களுடைய அறிவுத்திறன் அபாரமான வகையில் அதிகரிக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும்.உங்களின் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது எப்போதுமே நல்லது. விருச்சிகம் ராசி நேயர்கள் பண விஷயத்தில் என்று கூடுமானவரை அடுத்தவரை நம்புவது தவிர்ப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்துங்கள்.
பேச்சில் கவனம் செலுத்துங்கள்.மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.