Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. சாவில் மர்மம் உள்ளது…. தந்தை கொடுத்த புகார்….!!

பள்ளி மாணவி தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில்இருக்கும் கருக்கம்பாளையத்தை தை சேர்தவர்  சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார்.  இவருடைய மனைவி சாந்தி இவர்களுடைய  மகள் அகல்யா ஆவார்.  இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 முடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டதாகவும் மற்றும் தாய் சாந்தி உறவினர் வீட்டிற்கு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

பிறகு மாலையில் திரும்பிய சாந்தி  கதவு  உள்பக்கம் தாளிட்டு  இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் அகல்யா நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அலறி துடித்து  இருக்கிறார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மாணவியின் உடல் கீழே இறக்கப்பட்டது.மகளின்    உடலை பார்த்த தாய், உறவினர்கள்  கதறி அழுதனர்.

இதுபற்றி நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட  நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாணவியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாணவியின் தந்தை முத்துசாமி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.  இதன்பேரில் போலீசார் பள்ளி மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |