Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. வழியில் நடந்த கொடூரம்…. சிகிச்சை கொடுக்க மறுத்த மருத்துவர்…!!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது சிறுமியான இவர் தனது சாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிப்பதற்காக எடுத்துக்கொண்டு வயல் வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பாலமுருகன் என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக சோளக்காட்டுக்குள் இழுத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பாலமுருகன் சிறுமியை தாக்கி விட அவர் மயக்கமடைந்தார்.

மயக்கம் தெளிந்த போது தனது உடலில் ஆடைகள் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கிழிந்து கிடந்த தனது ஆடைகளை எடுத்து போட்டுக்கொண்டு வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனை வெளியில் கூறினால் அவமானம் என்று நினைத்த குடும்பத்தினர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால் உடல் வலியினால் மகள் அவதிப்படுவதை பார்த்தவர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர் எஃப்ஐஆர் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் வந்து மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சிறுமிக்கு சிகிச்சை அளிக்க அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாலமுருகனை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |