ஒரு மணி நேரம் பொறுங்கள் என் காதலன் வருகிறான் என்று உதகையில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மட்டகண்டி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாட்டையடுத்து எளிய முறையில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மணமேடையில் ஆனந்த் பிரியதர்ஷினிக்கு தாலிகட்ட முயன்றபோது பிரியதர்ஷினி தாலி கட்டுவதை நிறுத்த சொன்னார்.
பின்னர் கேட்டதற்கு ஒரு மணி நேரம் பொறுங்கள்… என்னை அழைத்துச் செல்ல என் காதலன் வருகிறான் என்று மன மேடையில் பிரியதர்ஷினி கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் பெற்றோர்கள் பிரியதர்ஷினிக்கு அறிவுரை கூறியும் பிரியதர்ஷினி கேட்காமல் இருந்ததால் திருமணம் பாதியிலே முடிந்தது. தாலி காட்டும் நேரத்தில் காதலன் வருகின்றான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.