கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் அங்குள்ள வாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் தொலைபேசியில் ராங் கால் மூலமாக பேசியுள்ளார். இருவரும் சாதாரணமாக பேசி பின்னர் நட்பாக மாறி, அது காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இளம்பெண்னிடம்உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று
இளைஞர் சொல்லியுள்ளார்.
அதற்க்கு அந்தப் பெண் இந்த வார்த்தைக்காக தான் இத்தனை நாள் நான் காத்திருந்தேன் என்று சொல்லி நாம் இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என்று குறிப்பிட்ட பகுதிக்கு வருமாறு அந்த பெண் இளைஞனை அழைத்துள்ளார்.ஆசைஆசையாக காதல் செய்த காதலியை, வருங்கால மனைவியை சந்திக்க செல்கிறோம் என்ற எண்ணத்தில் சென்ற இளைஞன் அந்த இளம்பெண் சொன்ன ஹோட்டல் சொகுசு விடுதிக்கும் சென்றான். இளம்பெண் இருந்த அறையை திறந்த இளைஞனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அறையில் இளம்பெண்ணுடன் ஏற்கனவே நான்கு இளைஞர்கள் இருந்ததால் ஒன்றும் புரியாமல் அந்த இளைஞன் இருக்குங்க… அந்த கும்பல் இளைஞனை மிரட்ட தொடங்கியது. மேலும் அந்த இளைஞனை ஆபாசமாக நிற்கச்சொல்லி அவனுடைய உடையை அவிழ்த்து, அதை போட்டோவாக எடுத்து நீ ஒரு பெண்ணுடன் நிவாரணமாக இருப்பது உன் வீட்டிற்கு தெரிந்தால் என்னவாகும் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
ஒன்றும் புரியாத இளைஞன் பயந்து போய்…. நான் என்ன செய்ய வேண்டும் ? என்று கேட்க அதற்கு எங்களுக்கு பணம் வேண்டும். மூன்றரை இலட்சம் ரூபாய் கொடு என்று கட்டாயப் படுத்தி உள்ளனர். உடனே என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னதற்கு அவனிடம் இருந்த செல்போன், ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த கும்பல் அந்த இளைஞரை காரில் வைத்து சுற்றியுள்ளது.
ஒரு கட்டத்தில் இளைஞன் சிறுநீர் கழிக்கவேண்டும் இறக்கி விடுங்கள் என்று சொன்ன போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இளைஞனை இறக்கி விட்டனர். இதையடுத்து, இளைஞன் என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தினான். இதை அறிந்து சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் மீண்டும் இளைஞனை காருக்குள் இழுக்க முயன்றபோது… அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சத்தம் கேட்டு ஓடி வந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து இளம் பெண் ஆர்யா, கடத்தல்காரன் யாசின், அஸ்வின், ஆசிப், ரிஷ்வான் ஆகிய 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த கும்பலோடு தொடர்புடைய மேலும் 4 பேரை கடத்தல் வழக்கில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.