தேங்காய் லெமன் கிராஸ் காய்கறி சூப் தேவையான பொருள்கள்:
லெமன் கிராஸ் இலைகள் – 2 கப்
கேரட் – 1
தக்காளி – 1
பூண்டு – 2
காலிஃப்ளவர் – சிறிது
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
பால் – 200 மில்லி
பெருங்காயம் – சிறிதளவு சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் கேரட், தக்காளி, காலிஃப்ளவர், அனைத்தையும் சுத்தமான நீரில் கழுவி பின்பு மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் லெமன் கிராஸ் இலைகள், வெங்காயம், பச்சைமிளகாய் தேவைப்படும் அளவிற்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ,அதில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கி கொள்ளவும்.
மேலும் நன்கு வதக்கியதும் 2 லிட்டர் தண்ணீர் விட்டு ,அதில் சோள மாவை போட்டு நன்கு கலக்கவும் .தண்ணீர் கொதித்து வந்ததும், நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை அதில் போடவும்.
காய்கறி கலவையானது நன்கு வெந்ந்ததும் 200லிட்டர் பால் ஊற்றி இறக்கவும் அதன் பின்னர் உப்பு மற்றும் மிளகு பொடியை கலந்து லெமன் ரைஸ் நிலை மேலாக தூவவும்