Categories
அரசியல் தேசிய செய்திகள்

“விதிகள் தெரியாத கவுதம் காம்பீர்” ஏன் ஆடுகிறார்..? ஆம் ஆத்மி வேட்பாளர் ட்வீட்…!!

விதிகள் தெரியவில்லை என்றால் கவுதம் காம்பீர் ஏன் விளையாட வேண்டும்? என்று  ஆம் ஆத்மியின் கட்சியின் வேட்பாளர் அதிஷி ட்வீட் செய்துள்ளார்.

டெல்லியில் நடைபெற இருக்கும் மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே 12_ஆம் தேதி நடைபெற  இருக்கின்றது. இதில் டெல்லி கிழக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார்.  இவர் கடந்த வியாழகிழமை முன் அனுமதியின்றி ஜாங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி போலீசாருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதையடுத்து காம்பீர் மீது புகார் பதியப்பட்டது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் அதிஷி  டுவிட்டர் பதிவிட்டுள்ளதில் , கவுதம் காம்பீர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல முரண்பாடுகள் , 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு தற்போது சட்டவிரோத பேரணி நடத்தியதற்காக FIR பதிவு எனவே விதிகள் தெரியவில்லை என்றால் கவுதம் காம்பீர் ஏன் விளையாட வேண்டும்? என்று ட்வீட் செய்துள்ளார்.

 

Categories

Tech |