நடிகர் சிம்புவிடம் பல மாற்றகள் இருப்பதாக அவரது தங்கை கூறியுள்ளது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிம்பு பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ள சிறந்த நடிகர். இவர் நடிப்பிலும், பேச்சிலும், பெரும் ரசிகப்பாட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் சிம்பு நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. சிம்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் உடல் அமைப்பை முழுவதும் மாற்றியுள்ளார்.
அவர் உடலமைப்பை மாற்றியதும், அதனை போட்டோ எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இந்த மாற்றத்துக்கு உதவிய மற்றும் வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி என்று ட்வீட்டரில் தெரிவித்தார். சிம்புவின் ட்விட்டை குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா வெளியிட்டுள்ள ட்விட் பதில்,
சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும் தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள்”. இவ்வாறு இலக்கியா தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ட்விட்டை பகிர்ந்து வருகின்றனர்.