Categories
கிரிக்கெட் விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பரிந்துரை..!!

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா  ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டுத் துறையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு  உயர்ந்த விருதான அர்ஜூனா விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில்  நடப்பு ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்குவதற்கு  இந்திய கிரிக்கெட் வீரர்களை  தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது.

Image result for Mohammed Shami, Ravindra Jadeja, Jasprit Bumrah

இந்த கூட்டத்தில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ்,  இந்திய கிரிக்கெட் வீரர்கள் , ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி, மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்களை மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் மூவரும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |