முட்டை பரோட்டா செய்ய தேவையான பொருள்கள்:
மைதா – மூன்று கப்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
முட்டை – ஒன்று
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும். அத்தோடு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் நடுவில் ஒரு குழி செய்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, போதிய அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து மாவை தயாரித்துக் கொள்ளவும்.
மேலும் அதனுடன் எண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் மூடி வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து, மெல்லிய சப்பாத்தி போல் செய்து, மேலே எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
அதனிப்பின் சிறிதளவு மைதா பவுடரை தொட்டு உருண்டையாக செய்து கொள்ளவும். பின் புரோட்டாவை கைகளால் தட்டி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.