Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ப்ளாக் டீகும் இதுக்கும்… காம்பினேஷன்… செம்மையை இருக்கும்…!!

முட்டை வடை செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை                            – 3
வெங்காயம்                  – 3
மிளகாய்த்தூள்            – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்                   – கால் ஸ்பூன்
கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன்
உப்பு                                  – தேவைக்கேற்ப
கடலை மாவு                  – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை  – சிறிது கட்டு

செய்முறை: 

முதலில் முட்டைகளை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தையும்,  கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி அதோடு கலந்து விடவும்.

அதனோடு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், கரம்மசாலாத்தூள், கடலை மாவு கலந்து நன்கு பிசைந்து வடை மாவு பதத்திற்கு விரவவும்.

பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் தயாரித்த மாவை எடுத்துக் கொண்டு வடை போல் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான முட்டை வடை ரெசிபி தயார்.

Categories

Tech |