Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த பழத்தை வைத்து லட்டா? அதுவும் அடிச்சிக்க முடியாத சுவையில்…!!

மாம்பழ லட்டு செய்ய  தேவையானப் பொருட்கள்:

மாம்பழ கூழ்                          – 1/2 கப்
சுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப்
தேங்காய் பவுடர்                 – 1 கப்
ஏலக்காய் பொடி                 – 1/4 டீஸ்பூன்
நட்ஸ்                                          – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

அடுப்பில் அடி கனமுள்ள பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து கொள்ளவும். அதனுடன் மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பாலை ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்கி கொள்ளவும். பின்பு சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து அந்தக் கலவை இறக்கி கொள்ளவும்.

நன்கு ஆறியப்பின் சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை  எடுத்து  தூவி, அதன் மீது, செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்து பரிமாறினால் சுவையான மாம்பழ லட்டு ரெடி.

Categories

Tech |