தயிர் சேமியா செய்வதற்க்கு தேவையான பொருட்கள்:
சேமியா – 250 கிராம்
சுத்தமான தயிர் – 3 கிண்ணம்
கடுகு – தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4
கருவேப்பில்லை – தேவையான அளவு
முந்திரி – 10 எண்ணம்
உப்பு – தேவையான அளவு. கேரட் – 2 எண்ணம் (சிறியது)
பழவகைகள் – ஆப்பிள், பிளம்ஸ் பழம், மாதுளை பழம், முந்திரி பருப்பு
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் மிளகாய் மற்றும் கேரட்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு பிளம்ஸ் பழம், மாதுளை பழம் முந்திரிபருப்பு, ஆப்பிள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அதனையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் சேமியாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாதியளவு வேகவைத்து எடுக்கவும். சேமியாவில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியவுடன் கடுகு, முந்திரி, மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு அனைத்தையும் பொன்னிறமாக மாறும் படி வறுக்கவும்.
அதனுடன் தயிர், நறுக்கிய கேரட் மற்றும் பழவகைகளை போட்டு, தேவையான அளவிற்கு உப்பையும் போட்டு கொள்ளவும்.
ஒரு நிமிடம் வரை நன்றாக கிளறி, அதனுடன் வேகவைத்த சேமியாவையும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும். அதன் மேல் வெட்டி வைத்த பழங்களினால் அலங்கரித்து கொள்ளலாம் .
இப்போது சுவையான தயிர் சேமியா தயார். இதனை குளிர்சாதன பெட்டியில் (பிரிஜ்) வைத்து குளுகுளுவென்றும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.