காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார். இவருக்கு பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் ஏற்பட்டு நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்ய முடியாது என்று பரத் கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜாய்ஸ் பிரியா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவல் கிடைக்கப் பெற்ற காவல்துறையினர் விரைந்து சென்று ஜாய்ஸ் பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நான்கு வருடங்களாக தங்கள் மகளை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த பரத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியாவின் தந்தை புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தலைமறைவான பரத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.