Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கணவனுடன் சண்டை” புதுப்பெண்ணின் அவசர முடிவு…. 2 மாதத்தில் ஏற்பட்ட சோகம்….!!

திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கொடைக்கானலை சேர்ந்தவர்கள் ஷோபனா-அஜித்குமார் தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அப்சர்வேட்டரி செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன ஷோபனா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானலில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷோபனா உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஷோபனாவின் தந்தை கோபால் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |