பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் காந்தி நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளர் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதனை காட்டி புனிதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து புனிதா விருதம்பட்டு காவல் நிலையத்தில் கருணாகரனை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார்.