மகள் இறந்த செய்தி கேட்டதும் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தங்கள் வீட்டில் பூச்சி மருந்து அடித்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். மருந்தின் விஷத்தன்மை பரவி சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் சண்முகத்தின் மகளான அனுராதா சுவாசப் பிரச்சனை காரணமாக செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சண்முகம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இந்நிலையில் அனுராதா இறந்த தகவல் அவரது தாய் பிரேமகுமாரிக்கு தெரியவந்தது. தனது மகள் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.