கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு அதிமுக தொண்டர்கள் உட்பட தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் என ஆளும் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அமைச்சரின் மரணத்தை தமிழக அரசு அனுசரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை, தஞ்சையில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, தஞ்சை மாவட்டங்கள் அரசு அலுவலகங்களில் அரை கம்பத்தில் தேசியக் கொடி பறக்கும் எனவும் தெரிவித்துள்ளது.