நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – கால் கிலோ
மிளகாய் – 5
எண்ணெய் – தேவைக்கேற்ப
வெந்தயம் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட வேண்டும். அதில் நெல்லிக்காயை போட்டு கொதித்ததும் இறக்கி, நீர் வடித்து விட வேண்டும்.
பிறகு வெந்தயம், பெருங்காயத்தையும் வாணலியில் சிறிது என்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, வெந்த நெல்லிக்காய்கள், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பையும் கலந்து இரண்டு கிளறி இறக்கி விடவும்.
அதன்ப்பின் பெருங்காயதையும், வெந்தயப் பொடியையும் கலந்து ஜாடியில் போட்டு குலுக்கி வைக்கவும்.
குறிப்பு:
எண்ணெயில் நெல்லிக்காயை வதக்கும் போது, அதிகமாக வதங்க விடக்கூடாது. காய் மென்மையை இழந்து விடும்.