Categories
உலக செய்திகள்

மர்ம நபரின் கொடூர செயல்…. “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” காவல்துறை எச்சரிக்கை…!!!

மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக பலரை குத்தி கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் கியூபெக் நகரில் இருக்கும் ஹில் பகுதியின் Chateau Frontenac அருகில் மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் பலரை குத்தியுள்ள சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம நபரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், சந்தேகதின்  பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://twitter.com/i/status/1322758709618106369

Categories

Tech |