சுரைக்காய் இனிப்பு போளி செய்ய தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
நெய் – தேவையான அளவு
தேங்காய் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 டேஸ்பூன்
பால் – 1/2 கப்
கேசரிபவுடர் – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்று சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அதன் பின்னர், வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சுரைக்காயை சேர்த்து நன்கு வதங்கிய பின்பு பால் சேர்த்து நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு அதில் கேசரி பவுடர், சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது அதில் சிறிது நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறியவுடன் இறக்கி குளிர வைக்கவும்.
இறுதியில் உருட்டி வைத்த மைதா மாவை, சப்பாத்தி போன்று தேய்த்து நடுவே கொதிக்க வைத்த ஒரு ஸ்பூன் சுரைக்காய் கலவையை வைத்து நான்கு புறமும் மடித்து மீண்டும் ஒருமுறை லேசாக தேய்த்துக் கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள மைதா மாவை போட்டு நெய் ஊற்றி முன்னும் பின்னும் புரட்டி போட்டு நன்கு வேக வைத்து இறக்கினால் சுவையான சுரைக்காய் இனிப்பு போளி ரெடி.