துவரம் பருப்பு சட்டினி செய்ய தேவையான பொருள்கள்:
துவரம்பருப்பு – கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பூண்டு – 2 பல்
புளி, உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் துவரம்பருப்பை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு மிளகாயை வறுத்தெடுக்கவும். தேங்காய் துருவல், வத்தல் புளி சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.
இறுதியில் பூண்டை சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.