Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் இளைஞர்கள்” அதிகாரியிடம் தகராறு… பைக் தீவைத்து எரிப்பு…. 3 பேர் கைது….!!

மூன்று வாலிபர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.

கோவை  கணபதி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்.  இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தமிழரசன், உண்ணி என்ற பிரவீன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோபிநாத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதற்கு முன்னரே  இந்த மூன்று வாலிபர்களும் அதே பகுதியில் வசித்து வரும் மாநகராட்சி அதிகாரியான முருகப்பாண்டி  வீட்டின் அருகே நின்று சத்தம் போட்டுக் தகராறு செய்தனர் .அதனை முருகப்பாண்டி அவர்கள்  தட்டி கேட்டதால்  அவர்கள் 3 பேரும் மாநகராட்சி அதிகாரியை  தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல்  விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து முருகப்பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |