துலாம் ராசி அன்பர்களே…! சுமாரான பணவரவு வந்தாலும் மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும்.
கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவு ஏற்படக்கூடும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும்.தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு காலதாமதமாகும் முன்னேற்றமடைய. உங்களுடைய செயலில் வேகம் கூடும்.
நீங்கள் விவேகம் உடன் எதிலும் செயல்படுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். ஆன்மீகத்துடன் எதையும் செய்யுங்கள். கணவன் மனைவி இருவரும் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள். தீர ஆலோசித்து எதையும் செய்யுங்கள். சகோதரர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
கோபம் ஏதும் கொள்ள வேண்டாம். ஆனால் குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை இருக்கும். மாலை நேரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் மனம் நிம்மதியாக இருக்கும். அதே போல் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கூடுமானவரை எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.
இன்று மாணவக் கண்மணிகள் கடுமையான உழைப்பை பின்பற்றி கல்வியில் ஆர்வத்தை செலுத்த வேண்டும்.இன்று முக்கியமான பணியில் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லதே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.