Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சொத்து அமையும்..! சுபகாரியம் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் புதிய சொத்துக்கள் அமையக்கூடிய நாளாக இருக்கும்.

நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக நடைபெறும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். மனதில் மட்டும் இனம் புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உருவாகும். வீடு மாறலாமா என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.

வாகனத்தையும் நீங்கள் புதுப்பித்துக் கொள்வீர்கள். தேவையில்லாத சில செலவுகள் இருக்கும் கவனித்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.மகரம் ராசி காரர்கள் இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பெரிய தொகையை ஈடுபடுத்த வேண்டாம்.கொஞ்சம் பொறுமை காத்து பின்னர் முதலீடுகளில் ஈடுபடுவது நல்லது. அதே போல நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம் உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.

மாலை நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் நல்லதைக் கொடுக்கும். மாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். கல்விக்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி தான் இருக்கும்.காதலில் உள்ளவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அன்பாக வெளிப்படுத்துங்கள். கோபத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தை ஆடை அணிந்து கொள்ளுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் தோஷங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |