ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று அதிக எதிர்பார்ப்பும், இன்பமும் ஏற்றமும் உண்டாகும். மனதில் தெம்பும், மகிழ்ச்சியும் நிலவும்.
தொழிலில் ஆர்வம் கூடுவதால் ஆதாயம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் ஏற்படும். குடும்பசுகம் பூரணமாக கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். சுபகாரியங்களில் குடும்பத்தாருடன் கலந்துக் கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவுகள் கிடைக்கும்.
வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கிடைக்கும் சூழல் ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கும் கல்வியில் வெற்றி வந்துச்சேரும். கணவன் மனைவி இருவருக்கும் அன்பு நிறைந்துக் காணப்படும்.
குடும்பத்தில் இன்று சுமுகமான சூழல் நிலவும், ஆனால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் முன்னேற்றகரமாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.