Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பதவி உயர்வுகள் கிடைக்கும்..! வெற்றிச் செய்தி வந்துச்சேரும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். வருமானங்கள் அதிகரிக்கும்.

அரசு வங்கியில் எதிர்பார்த்த கடன் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு வெற்றிச்செய்தி வந்துச்சேரும். இன்று நீங்கள் பெரியவர்களின் மூலம் நல்ல அணுகூலத்தை அடைவீர்கள். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும்.

வெளியிடங்களில் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகம் மிகுந்து காணப்படும். மனதில் அமைதி நிலவும். இன்று எண்ணற்ற வேலைகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படக் கூடும். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் பெருகும். இன்று மனதில் தோன்றுவதை வெளிப்படையாக கூறுவீர்கள், இதனால் சிறிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். காதலர்களுக்கும் இன்றைய நாள் நல்லநாளாக இருக்கும். குடும்பத்தில் இன்று அமைதி நிலவும். கலகலப்பான சூழலும் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் வெற்றி வந்துச்சேரும்.

ஆர்வமுடன் எதையும் செய்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |