Categories
தேசிய செய்திகள்

காதலிக்க சொல்லி டார்ச்சர்…. சிறுமி கழுத்தை அறுத்த இளைஞர்… நடுரோட்டில் நடந்த பயங்கர சம்பவம் …!!

காதலை ஏற்க மறுத்த சிறுமி நடுரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்னும் சிறுமியை சுனில் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் வரலட்சுமி தொடர்ந்து சுனிலின் காதலை மறுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வரலட்சுமியை சுனில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்ற கோபமடைந்த சுனில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் வரலட்சுமியின் தொண்டையை வெட்டியுள்ளார்.

இதனால் சரிந்து விழுந்த வரலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வரலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து சுனிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |