Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈசியான மற்றும் டேஸ்டியான… முட்டை தோசை ரெசிபி…!!

முட்டை தோசை செய்ய தேவையான பொருள்கள் :

தோசை மாவு               _  1 கப்
முட்டை                           – 1
மிளகு தூள்                    – சிறிதளவு
வெங்காயம்                 – 1
எண்ணெய்                   – தேவைக்கேற்ப 

செய்முறை :

முதலில் வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் முட்டையை எடுத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி, அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, வெங்காயத்தை தூவவும். பின்பு வேகவைத்த தோசையை சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போடவும்.

இறுதியில் மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான முட்டை தோசை தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்..

Categories

Tech |