சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் மணமகனை பிடிக்கவில்லை என்று கூறியதோடு தான் காதலிக்கும் நபர் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
இதனால் திருமணம் நின்றது மணமகனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனைத்தொடர்ந்து பெண் தனது காதலனை தேடி சென்னைக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மணப்பெண்ணான பிரியதர்ஷினி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் வீட்டை விட்டு செல்லவில்லை. எனது பெற்றோருடன் தான் இருக்கிறேன். எனக்கு திருமணம் செய்து வைக்க இருந்த மாப்பிள்ளை மீது ஏராளமான புகார்கள் வந்தது. அவர் தவறானவர் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் காரணமாகத்தான் திருமணத்தை நிறுத்த பொய் சொன்னேன்” என கூறி தன் வீட்டில் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.